17 மார்., 2020

சளி தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் #HealthTips


 குளிர்காலம் ஆனால் பலருக்கும் சளி தொல்லை கொடுக்கும் , தடிமன் குறைய வீட்டிலேயே செய்யக்கூடிய பாட்டி வைத்தியம்  பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும்

வயதானவர்களைத் தொற்றுநோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.

"உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்கவிடாமல் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்

`பனிக்காற்றால்  சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். குளிர்க் காற்றில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். துளசி டீ, இஞ்சி டீ, புதினா டீ, சுக்கு மல்லி டீ போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ளலாம்.  குளிர் காலத்தில் தூசி போன்றவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதும் முக்கியம். மூக்கில் நீர்வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘ஸ்பிரே நாஸில்ஸ்’  (Spray Nozzles)உபயோகிக்கலாம்.


பனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால், அது சைனசஸாக உருவெடுக்க வாய்ப்பு உண்டு. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படும். இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியவை ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும்போதும் நிமிரும்போதும் தலை வலிக்கும். மூக்கு  அடிக்கடி  அடைத்துக்கொள்வதால் வாசனையை நுகர முடியாது. இதன் ஆரம்ப நிலை என்றால், மருத்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் அறுவைசிகிச்சை வரை செய்யவேண்டியிருக்கும்.

தொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில் காது சுத்தமாக அடைத்துக்கொள்ளும். இரவு நேரத்தில் காதில் தீவிர வலி ஏற்படும். சில சமயம் நடுக்காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு, பாக்டீரியா அதிகமாகப் பெருகும் வாய்ப்பும் உண்டு. பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்துகொண்டு நடக்கலாம்.

Related Posts

சளி தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் #HealthTips
4/ 5
Oleh