10 பிப்., 2015

இலங்கை பேஸ்புக் பாவனையாளர்கள் அவதானம்


உலகளவில் அதிகமான பாவனையாளர்களை கொண்ட ஒரு சமூகவலை தளமாக விளங்கும் பேஸ்புக் இலங்கையில் மட்டும் 18 வயதிற்கும் 24 வயதிற்குமிடைப்பட்ட 696,571 பேஸ்புக் பாவனையாளர்களாகவுள்ளதாக கொண்டுள்ளது

சமூக வலைத்தளங்களில் ஒருவகை இணைப்பு பரவிவருவதால் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அதனால் அசௌகரியம் ஏற்பட்டுவருவதாக இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.


அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் குறிப்பிட்டார்.

அவ்வாறான இணைப்புக்கள் உங்களது பேஸ்புக் பக்கத்தில் காணப்படின், அதனைப் பார்வையிடாது, பேஸ்புக் நிறுவனத்திற்கு அறியத்தரும் பட்சத்தில், அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்

Related Posts

இலங்கை பேஸ்புக் பாவனையாளர்கள் அவதானம்
4/ 5
Oleh