பேஸ்புக் பேக்ஐடி கண்டுபிடிக்க சில ரிப்ஸ்

facebook-fake
பேஸ்புக் பயன்படுத்தாதவர்களும் உண்டோ பேக் ஐடிகளிடம் மாட்டிக்காதோரும் உண்டோ என்ற நிலையாகிப்போய் நொந்துபோன நண்பர்களின் கேள்வி எப்படி இந்த பேக் ஐடிகளை கண்டு பிடிப்பது என்பதுதான் பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சில ரிப்ஸ்

பேக் ஐடிக்கள் எதையும் யோசித்து பதிவு எழுதாது. குட்மார்னிங் என்றோ குட்ஈவினிங் என்றோ ஸ்ட்டேடஸ் போடும்.பெண்களின் பெயரில் வரும் பேக்ஐடிக்களுக்கு எப்படி ஐந்து நிமிடத்தில் ஐநூறு லைக் வாங்க வேண்டுமென்று நன்கு தெரியும் அந்த ஜாம்பவான்களுக்கு. நான் நேற்று ரசம் வைத்தேன் என்று ஒரு பதிவு போடுவார்கள். உடனே ஐநூறு லைக் விழும்.அவங்க விஷம் வச்சா கூட ஆயிரம் பேர் லைக் போடுவார்கள் என்பது வேறு விடையம்

சாட்டிங் செய்தால் அவர்களை மிகச்சுலபமாக கண்டுப்பிடித்துவிடலாம் . ஹாய் என்று தயங்கி தயங்கி டைப் செய்வார்கள். பதிலுக்கு ஹாய் சொன்னால் ஐந்து நிமிடம் எதையோ யோசித்து யோசித்து மீண்டும் ஹை என்றுடைப் செய்து விட்டு பிறகு கொஞ்சநேரம் கழித்து ஆப்லைன் சென்றுவிட்டு வருவார்கள். ஏனேன்றால் அவர்கள் ஃபேக் ஐ.டி க்களை உருவாக்கியதே பெண்களிடம் பேசத்தான் அதிக ரெக்வஸ்டும் பெண்களுக்கு தான் தருவார்கள்.

பேஸ்புக்கில் வரும் பெண் பேக் ஐடிக்கள் மறந்தும் அரசியல் பதிவுகளை எழுத மாட்டார்கள். அப்படியே எழுதினாலும் கேப்டன் நேற்று இரவு தண்ணி அடித்தார். காலையில நிருபர்களைஅடித்தார் என்ற ரீதியில் மொக்கையாக எதையாவது சொல்லி விட்டு போவார்கள்

எங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்குறாங்க. பேஸ்புக்கில் யாராவது நல்லவன் இருந்தா சொல்லுங்க என்பது போன்றோ அல்லது என்னை கல்யாணம்செய்யுறவன் செத்தான் என்பது போன்றோ பதிவுகளை அடிக்கடி போட்டால் அது கன்பார்மாக பேஸ்புக்கில் பெண்களின் பெயரில் உலவும் பேக் ஐடியே தான்

அடிக்கடி எனக்கு சமையல் தெரியாது. துணி துவைக்க தெரியாது அதெல்லாம் போர் என்று பதிவு போடும். நாமும் கன்பார்மாக அது பெண்ணேதான் என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு லைக் போடுவோம். இனி அந்த தவறை செய்யாதிங்க.

போட்டோஸ்ல பாத்திங்கனாளே தெரிஞ்சிரும் பாஸ் அதுல அந்த பொண்ணோட போட்டோஸ் நிறைய இருந்தா ஓ.கே, அதே ஒரே ஒரு போட்டோ மட்டும் அல்லது சமந்தா, நஸ்ரியான்னு நிறைய போட்டோ இருந்தா அது நம்ம பயபுள்ள தாங்க யாரோ.

பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் ப்ரெண்ட் ரேக்வஸ்ட ஏத்துக்கமாட்டாங்க, நீங்க ரேக்வஸ்ட அனுப்பி உடனே ஏத்துக்கிட்ட அது ஃபேக் ஐ.டி யே தான். இனிமேலாவது கேள்ஸ் க்கு ரெக்வஸ்ட் கொடுக்கும் போது செக் பண்ணிகிங்க.

Previous
Next Post »