16 நவ., 2013

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்

இன்றைய காலகட்டத்தில் நேரமின்மை காராமாகவும் வேறு பல காரணங்களாலும்  வெளியே படிக்க ஆர்வம் இருந்தும் அதனை செய்ய முடியாத காரணங்களால் இணையத்தளத்தில் கற்க பலரும் விரும்புகின்றனர்  எலக்ட்ரானிக்ஸ் பற்றி கற்க ஒரு சிறந்த இணையத்தளம் பற்றி பார்ப்போம் 


பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு  இணையம்

எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஓன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது.

தினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டு ஓன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மொடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம்

அல்லது  கீழே உள்ள சுட்டியை  சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம்.எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே உருவாக்கலாம்.

எல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம்.

இணையத்தள முகவரி

0002

Related Posts

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம்
4/ 5
Oleh