31 மார்., 2012

i phone இன் புதிய பயனுள்ள Application

நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை அவர்கள் மட்டும் படிக்க பிளாக் எஸ்எம்எஸ் என்ற புதிய அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஐபோனில் பயன்படுத்தலாம்.

இதற்கு சில வழிமுறைகளும் இருக்கிறது. இந்த அப்ளிக்கேஷன் மூலம் வேண்டிய மெசேஜை டைப் செய்ய வேண்டும். ஆனால் இதற்கென்று பாஸ்வேர்டும் உருவாக்க வேண்டியது அவசியம்.

இதன் மூலம் ஒருவர் அனுப்பும் மெசேஜை, அந்த பாஸ்வேர்டு தெரிந்த நபர் தான் திறந்து படிக்க முடியும். வர்த்தக ரீதியாக முக்கிய தகவல் பரிமாற்றங்களை பகிர்ந்து கொள்ள இந்த பிளாக் எஸ்எம்எஸ் அப்ளிக்கேஷன் பெரிதும் உதுவும்.
 
iPhone

இப்படி பிளாக் எஸ்எம்எஸ் அப்ளிக்கேஷன் மூலம் ரகசிய மெசேஜ்களை அனுப்ப ஐபோனில் ஒரு ரகசிய வழியும் இருக்கிறது. பிளாக் எஸ்எம்எஸ் மூலம் மெசேஜ் அனுப்பும் போது, அதை பெறும் நபரின் ஐபோனிலும் இந்த அப்ளிக்கேஷன் டவுன்லோட் செய்திருக்க வேண்டும். அப்போது தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.


ஆனால் இந்த வசதியை ஜெயில்ப்ரேக் செய்த ஐபோன்களில் பயன்படுத்த முடியாது. இந்த அப்ளிக்கேஷனை ஐடியூன்ஸ் அல்லது ஆப்ஸ் ஸ்டோர்களில் இருந்து இதை டவுன்லோட் செய்யலாம். மேலும் இதை 0.99 விலைக்கு டவுன்லோட் செய்து, நாம் அனுப்பும் மெசேஜ்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.
 
தரவிறக்க சுட்டி
0002

Related Posts

i phone இன் புதிய பயனுள்ள Application
4/ 5
Oleh