தமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம்

தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது ஒரு அருமையான தளத்தைப் பற்றி. அதில் உள்ள ஒரு பயன்மிக்க மென்பொருளைப் பற்றியதுதான் இந்த பதிவு.  நாம் ஆங்கிலத்தில்  எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை  கேள்விப்  பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.


தமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம் 

அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.
தமிழில் எழுதியதை வாசித்துக்காட்ட இங்கு கிளிக் செய்யவும்
மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும்.(அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் தங்களுக்கு விருப்பப்பட்ட தமிழ் தளத்தில் உள்ள கட்டுரைகளை Copy செய்து இங்கு Pasteசெய்தும் பயன்படுத்தலாம்.)தமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம்

Submit  கொடுத்ததும் உடனே அடுத்த பக்கத்திற்கு போகும்.
அங்கு இவ்வாறான ஒரு வாக்கியங்கள் இருக்கும்.


அதில் click here என்பதை சொடுக்கி நீங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் அல்லது வார்த்தைகளின் ஒலிவடிவ கோப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு நான் இந்த தளத்தின் மூலம் உருவாக்கிய ஒலிவடிவ கோப்பு.. கேட்டுப் பாருங்களேன்..!!


Previous
Next Post »