இணையத்தில் Bible படிக்க உதவும் இணையதளம்.

இணையத்தில் Bible படிக்க உதவும் இணையதளம்.

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டக்கூடிய தளங்களின் வரிசையில் இ பைபிள் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.அந்த அளவுக்கு உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு இரண்டிலுமே இந்த தளம் சிறந்து விளங்குகிறது. இ பைபில் அடிப்படையில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் இ புத்தக வடிவம் தான் என்ற போதிலும்,அதோடு இணையத்தில் பைபிள் சார்ந்த தளங்களுக்கு குறைவில்லை என்ற போதிலும் தோற்றத்திலும் சரி,பயன்பாட்டிலும் சரி மிகச்சிறந்த தளம் என்னும் எண்ணத்தை மிக எளிதாக ஏற்படுத்தி விடுகிறது.

பைபில் என்றதுமே கிறிஸ்துவர்களிலேயே கூட ஆன்மிக சிந்தனை கொன்டவர்கலுக்கு மட்டுமே ஆர்வம் ஏற்படலாம் என்ற போதிலும் இந்த தளம் இணையவாசிகளின் கவனத்திற்குறியது.

காரணம் வாசிப்பு அனுபவத்தை எந்த அளவுக்கு எளிமையாக்கி மேம்படுத்தி தர முடியும் என்பதற்கான உதாரணமாக இருக்கிறது.

பைபிலுடன் உங்களை மேலும் ஒன்றிப்போக செய்ய உதவுவதாக சொல்லும் இந்த தளம் உண்மையிலேயே அதனை மிக அழகாக செய்கிறது.

இணையத்தில் பைபிலை படிக்க விரும்பினால் எண்ணற்ற தளங்கள் இல்லாமல் இல்லை.ஆங்கிலத்தில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட புத்தகம் அல்லவா,இணையத்திலும் பைபிலுக்கு என்று அதிக தளங்கள் இருக்கின்றன.

இந்த தளங்களில் பைபிள் புத்தகம் பலவிதங்களில் வாசிக்க கிடைத்தாலும் இணைய வாசிப்புக்கு அவை ஏறதாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.முதல் பிரச்சனை பைபில் தளங்களின் வடிவமைப்பு சிக்கலானதாகவும் குழப்பத்தை ஏறப்டுத்தக்கூடியதாகவும் இருக்கின்றன.இரண்டாவது பிரச்ச்னை பைபிள் வாசகத்துக்கு அருகே இடைசெருகலாக வரும் விளம்பரங்கள் கவனத்தை சிதற வைக்ககூடும்.

இந்த இடைஞ்சல்கள் எல்லாம் இல்லாமல் பைபிளை மட்டும் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதை தான் இ பைபில் செய்கிறது.

இபைபில் தளத்தில் புத்தகம் பகுதியை கிளிக் செய்தால் வேதாகமத்தின் அனைத்து அத்தியாயங்களும் தோன்றுகின்றன.எந்த அத்தியாயம் தேவையோ அதை கிளிக் செய்து வாசிக்க துவங்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிக அளிதாக படிக்க கூடிய வகையில் வாசகங்கள் இடம்பெறுகின்றன.தோற்றம் ,எழுத்துரு என் எல்லாவற்றிலும் எளிமையும் தெளிவும் நெஞ்சை அள்ளுகின்றன.

ஒரு அத்தியாயத்தில் இருந்து இன்னொரு அத்தியாயத்திற்கு செல்வது மிகவும் சுலபம்.அதே போல விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்வதும் சுலபம்.இத்தகைய எளிமையான மின் புத்தக வடிவத்தை வேறு எங்கும் பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.

பைபிளை பல்வேறு மொழிகளிக் படிக்கும் வசதியும் இருக்கிறது.படித்து கொண்டிருக்கும் போதே அதே பக்கத்தில் குறிப்புகலை எழுதி வைக்கலாம்.மனதுக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிடலாம்.பைபில் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்களையும் அணுகலாம்.

மேலும் பைபிள் வாசகங்களை அப்படியே வலைப்பதிவு போன்றவற்றிலும் இடம் பெற வைக்கலாம்.

இணையத்தில் பைபில் படிக்க இதைவிட நல்ல தளம் இல்லை என்றே சொல்லலாம்.

பெரும்பாலான பைபிள் தளங்கள் விளம்ப்ர இடைஞ்சல்களோடு படிக்க இனிமையான அனுபவமாக இல்லாமல் இருப்பதால் வெறுத்து போய் இந்த தளத்தை உருவாக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதற்கு இந்த தளமே சாட்சியாக நிற்கிறது.

திருக்குறளில் துவங்கி கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கு இதே போன்ர இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய தளத்தை அமைத்தால் நன்றாக இருக்கும்.


இணையதள முகவரி

Previous
Next Post »