எல்லோருக்கும் தான் பிறந்த வருடம் தெரியும். ஆனால் அந்நேரத்தில் உலகத்தில் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இக்கவலையைப் போக்கத் தான் இந்தத் ஆங்கிலத் தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நாம் பிறந்த வருடம் இவ்வுலகில் என்னனென்ன செய்திகள் பிரபலம், யாருக்கு என்ன விருது கிடைத்தது, என்ன நிகழ்வுகள் நடந்தன, அந்த வருடத்தின் அரிய கண்டுபிடிப்புகள், பல விதமான நிகழ்வுகளை அருமையாகப் பட்டியலிடுகிறார்கள்.
இந்த இணையதளத்தில் நுழைந்தவுடன் நம்முடைய பிறந்த வருடத்தை டைப் செய்தால் உடனே வருடங்கள் பின்னோக்கி நகரும். நாம் பின்னோக்கி நகர்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
அடுத்து உங்கள் வருடத்திற்கான செய்திகள் அருமையாக ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். இந்தத் தளம் சற்று வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.
இணையதள முகவரி
நீங்கள் பிறந்த வருடத்தில் உலகில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள
4/
5
Oleh
Jaffna pc